• July
    17
    Wednesday

Main Area

Main



காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

supremecourt
supremecourt
Loading...

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணைய தலைலவராகவும் மசூத் உசைன் உள்ளார்.

இதனிடையே, மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, நீர்வள ஆணைய தலைவராக மசூத் உசைன் உள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. அதில், மசூத் உசைன்  பாரபட்சமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுகிறார். மத்திய நீர்வளத்துறை தலைவர், காவரி மேலாண்மை ஆணைய தலைவராக இருப்பது பொருத்தமற்றது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.