• January
    21
    Monday

Main Area

Main

மரண மாஸ் காட்டும் 'பேட்ட' !!; அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

petta
Loading...

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் டோலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருவதால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கடந்த 9-ஆம் தேதி ஆந்திராவில் வெளியான பாலகிருஷ்ணாவின் என்.டி.ஆர்.கதாநாயகடு படம் பலரது வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் தெலுங்கில் வெளியான பேட்ட படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

petta

ரஜினியின் ஸ்டைலை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். பேட்ட தெலுங்கு உரிமையை அசோக் வல்லபனேனி என்பவர் இருபது கோடிக்கும் அதிகமாக வாங்கியிருப்பதாக தெரிகிறது. என்.டி.ஆர் படத்தோடு இந்தப்படத்தையும் துணிந்து வெளியிட்டார். இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு பேட்ட படத்திற்கு திரையரங்குகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. 

ram charan

இந்நிலையில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த ‘வினய விடய ராமா’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. பேட்டயின் கொண்டாட்டத்தில் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ராம்சரண் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். 

வெங்கடேஷ் நடித்து வெளியாகியிருக்கும் ‘எஃப் 2’ படத்திற்கு மட்டும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் இன்று ஒருநாள் மட்டும்தான் அந்த ஆதரவு இருக்கும் என்றும், மீண்டும் பேட்ட படத்திற்கு கூட்டம் அலைமோதும் என்கிறார்கள். ஆக டோலிவுட்டிலும் பேட்ட வேலன் பட்டையை கிளப்பி வருகிறார். 

2018 TopTamilNews. All rights reserved.