• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

‘பேட்ட’ டிரைலர் எப்போ தெரியுமா?: ரஜினி ரசிகர்கர்களுக்கு மரணமாஸ் ட்ரீட் காத்திருக்கு..!

petta

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் டிச12ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மரணமாஸ்’ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான ‘உல்லால்லா’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிச.9ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இத்துடன், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

             
2018 TopTamilNews. All rights reserved.