• January
    21
    Monday

Main Area

Main

பேட்ட vs விஸ்வாசம் - சென்னை வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

ajith
Loading...

சென்னை: பேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது.

ajith

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

rajini

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் விஸ்வாசம் சுமார் 88 லட்சம் ரூபாய் வசூலையும், பேட்ட 1.12 கோடி ரூபாயையும் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையை பொருத்தவரை வசூலில் விஸ்வாசத்தை பேட்ட படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு தோராயமான வசூல் நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே விஸ்வாசம் படத்தை சென்னையில் விநியோகம் செய்த நிறுவனம் 'ஜெயிச்சிட்டோம் பங்காளிகளா!' என்று ட்வீட் செய்துள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.