• April
    24
    Wednesday

Main Area

Main



மழையை அரசியலாக்காதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Loading...

புதுதில்லி: வட மாநிலங்களில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அரசியலாக்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பருவம் இல்லாத காலத்தில் பெய்த திடீர் மழை மற்றும் புயல் காற்றுக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வேதனை தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், குஜராத்தில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றார். குஜராத்துக்கு மட்டும் பிரதமர் அனுதாபம் தெரிவித்து, நிவாரணம் அறிவித்தது சர்ச்சையானது.

மேலும், நீங்கள் நாட்டின் பிரதமர் குஜராத் முதல்வரல்ல என்று மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் சாடியிருந்தார். இதையடுத்து, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

இந்நிலையில், இது அனுதாபத்திற்கான நேரம். மழையால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். சோகத்தில் உள்ளவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.