• March
    21
    Thursday

Main Area


கமல் கமீலா நாசர்

சொந்தக் குடும்பத்தைத் தவிக்க விட்ட கமீலா நாசர் - இது உங்க கண்ணுக்கு தெரியலையா கமல் ?

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மேல் இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்...


தினகரன் பத்திரிகை அலுவலகம்

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.


o.panneerselvam

ஓபிஎஸை வழிமறித்த மாணவி...! பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி..! அதிர்ச்சியில் அ.தி.மு.க-வினர்...!

மதுரை அலங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கல்லூரி மாணவிகள் இடை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டிடிவி தினகரன்

அ.ம.மு.க -வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கியப் பிரமுகர் ; தி.மு.க - வில் இணைகிறார்

டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.pramoth chvanth

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - கோவாவில் ஆட்சி அமைத்தது பாஜக

கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.


pakistan assembly

'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' - சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ

பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் 'இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்' என ஒரு எம்எல்ஏ ஆவேசமாக பேசினார். இதற்கு அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


public meeting

கட்சிகள் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரங்களில் இறங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள் வாகு சேகரிப்புக...

தாமரையும் தமிழிசையும்...பின்னே குமரி அனந்தனும்...இரவல் தாமரையின் பூர்வக்கதை!


இந்திய அரசியல் கட்சிகளிலேயே அதிகம் உடைந்த கட்சி இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி தான். இப்போது சோனியா காந்தி தலைமையில் இயங்கும் காங்கிரஸ் (இந்திரா காந்தி) என்ற பெயரில் உடைந்த ஒரு துண்டுதான். கடைசியாக ஜி.கே வாசன் உடைத்த த.ம.கவோடு  இதுவரை இந்தியா முழுவதுமாக அறுபது முறை உடைந்திருக்கிறது காங்கிரஸ் !

கா.கா.தே.கா - குமரி அனந்தனின் தனிக்கட்சி 

இதில் 1980-ல் உடைந்த ஒரு துண்டின் பெயர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்.உடைத்தவர் இன்றைய தமிழக பா.ஜ.க-வின் தலைவி தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன்.ஐந்து முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்த குமரி அனந்தன்.

tamilisai

 கா.கா.தே.கா என்று தனிக்கட்சி கண்டு தனிக்கொடி,தனிச்சின்னம் எல்லாம் உருவாக்கி சிலகாலம் போராடிப்பார்த்தார்.அதுவும் ஒரு ஜாதிக்கட்சியாக சுருங்கும் அபாயத்தை உணர்ந்த அனந்தன் மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டார். 

தாமரையின் கதை 

குமரி அனந்தனுக்கு ஒரு ஆண் மற்றும் நான்கு பெண் மக்கள். அதில் ஒருவர்தான் தமிழிசை.இப்போது 57 வயதாகும் தமிழிசைக்கு 1980-ல் வயது இருபதுக்குளே தான் இருந்திருக்கும்.கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டு இருந்திருக்கக்கூடும். 

அப்போது எங்கே பார்த்தாலும் கா.கா.தே.கா-வின் கொடிகளும் தட்டிகளும் நிறைந்த சூழலில் வளர்ந்தவர்.அதனால்தான் மூச்சுக்கு முந்நூறு தடவை’ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’என்று முழங்கிக்கொண்டு இருக்கிறார்.

lotus

ஆம்,அன்றைய குமரி அனந்தனின் கா.கா.தே.கா கட்சியின் சின்னமாக தாமரைதான் இருந்தது.இது கதைக்குதவாது என்று குமரி அனந்தன் கைவிட்ட தாமரைதான் இன்று பி.ஜே.பியி-ன் சின்னமாகிவிட்டது.தந்தையால் முடியாததை தான் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில்தான் தமிழிசை இந்தப்பாடு படுகிறாரோ!?

NewsDesk Wed, 03/20/2019 - 12:23
bjp lotus thamilisai soundhararajan lotus சிறப்பு கட்டுரை தேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்

English Title

story of bjp's lotus emblem

News Order

0

Ticker

0 
kerala CM

பாஜக போலவே இந்துத்வாவிற்கு மாறி வரும் காங்கிரஸ் - கேரளா முதல்வர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவா கொள்கையைக் கடைபிடித்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.


chowkidar

பொறாமையாக இருந்தால் உங்கள் பெயருக்கு முன்னாள் ' பப்பு ' என சேர்த்துக்கொள்ளுங்கள் - காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாஜக அமைச்சர்

பொறாமையாக இருந்தால் நாங்கள் பெயரின் முன்னால் 'சவுகிதார்' என்று போட்டுள்ளதைப் போல் காங்கிரசார் பப்பு என சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராணுவம் மோடியின் சொந்த சொத்து அல்ல - விளாசித் தள்ளும் எம்.பி., டி.ராஜா

எந்த காவலாளி மல்லையாவையும், நீரவ் மோடியையும் தப்பிக்க விடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசிய பல விவகாரங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

2019 தேர்தல் முக்கியமானது

தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் மிக மிக முக்கியமான ஒன்று. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மோடியின் ஆட்சியில் குடிமக்கள் ஏராளாமான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் கூட்டங்களுடன் இணைந்து நடத்தும் சம்பவங்களே காரணம். இவர்களால் நாட்டில் ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது. மக்கள் பெரும் அபாயத்தில் இருக்கின்றனர்.

d.raja

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான சமத்துவம், சகோதரத்துவம் என அனைத்துமே மோடி அரசால் பாதிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் என்பது யாருக்குமே இல்லை. பொருளாதாரம் பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

மோடி தான் காவலாளியா ?

தற்போது 'மக்கள் காவலாளி' என்று பொருள் தரும் 'சௌகித்தார்' என்ற சொல்லை பாஜக பிரமுகர்கள் தங்கள் பெயரின் முன்னாள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.  மோடி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மட்டும் தான் காவலாளி. மக்களுக்கு அல்ல. எந்த காவலாளி மல்லையாவையும், நீரவ் மோடியையும் நாட்டை கொள்ளையடிக்க அனுமதிப்பார்?

modi

இப்போது தேர்தல் நேரத்தில், சுய லாபத்திற்காக ராணுவத்தையும், விமானப்படையையும் மோடி பயன்படுத்தி வருகிறார். அது இந்திய ராணுவம், இந்திய விமானப்படை தானே தவிர மோடி ராணுவம், மோடி விமானப்படை அல்ல.


இவ்வாறு டி. ராஜா தெரிவித்துள்ளார்.

NewsDesk Tue, 03/19/2019 - 13:38
CPI d raja lok sabha election 2019 lok sabha election தேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்

English Title

Which chowkidar allowed Nirav, Mallya to flee?: D Raja

News Order

0

Ticker

0 

ttv dhinakaran

திருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது மூலம் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.


rajini

அரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா?

ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக முக்கிய முடிவைப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


kamaraj

தினகரனை கண்டு பயந்தே தேர்தல் ரத்தானது: அமமுக வேட்பாளர் காமராஜ் கருத்து!

டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சேர்ந்து தேர்தலை ரத்து  செய்துவிட்டதாக அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.karunanidhi

திருவாரூரில் கருணாநிதியே போட்டியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் வேட்பாளராகப் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டாலும், கருணாநிதியே போட்டியிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


sasikala

சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகையும் காங்கிரஸ் கட்சியின், நட்சத்திர பேச்சாளருமான விஜயசாந்தி சந்தித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.