முதல்வரை ஆதரிக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறாரே கனிமொழி - பாஜக
முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறாரே கனிமொழி என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இவ்வாறு பேசியிருந்த நிலையில் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய போது தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து வேசி சலசலப்பை அதிகப்படுத்தினார் ஆளுநர். அதற்கு சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களும், அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலினும் உடனே எழுந்து கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் அத்திரப்பட்டு வெளிநடப்பு செய்தார்.
இந்த தமிழ்நாடு விவகாரத்தால் திமுகவுக்கும் ஆளுநருக்குமான மோதல் நீடித்து வருகிறது. இதை அடுத்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, கொஞ்சம் கண்ணை காட்டி இருந்தால் போதும் கையில் கிடைத்ததை எடுத்து அடித்து இருப்பான். அங்கிருந்து ஆளுநர் போயிருக்க முடியுமா என்று ஆளுநரை கொலை செய்கிற ரேஞ்சுக்கு அவர் பேசி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்கு அடுத்ததாக சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய போது, ஆளுநரை செருப்பால் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். அம்பேத்கர் பெயரை சொல்லாத ஆளுநர் ஜம்மு காஷ்மீர் சென்றுவிடலாம். அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்லுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் யாரும் விபரீதமாக பேச வேண்டாம் என்று கட்சியினருக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலினே ஆத்திரப்பட்டு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே என்று ஆளுநரை ஒருமையில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த திமுக, ஆர். எஸ். பாரதியை நீக்காதது ஏன்? என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி இருந்தார்.
‘’என்னை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்று குடும்பத்தினர் தடுத்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்டாயப்படுத்தினார்கள். மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அத்தனையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏன் தெரியுமா ? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கிறப்போ அப்படி பெயர் சூட்டப்படுகின்ற அந்த விழாவிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்னால் இந்த உயிர் இருந்து என்ன பயன்? அப்படின்னு சொன்னவர் அண்ணா. இன்னைக்கு யாரோ தமிழ்நாடுன்னு சொல்ல கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே .. நான் கேட்கிறேன்... அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்’’ என்று முடித்துக் கொண்டார்.
இதற்கு நாராயணன் திருப்பதி, முதல்வராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்! என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மரியாதைக் குறைவாக பேசுபவர்களை திமுக ஆதரிக்காது, ஊக்குவிக்காது கனிமொழி எம்பி சொல்லி இருப்பதற்கு, ஆளுநரை மரியாதைக் குறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க முடியாது, ஊக்குவிக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறாரே! சிறப்பு! என்கிறார் நாராயணன்.