எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில்.. குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றம்

 
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  மொத்தம் 12 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை வரை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய 2 அவைகளிலும் மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சில மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாகி உள்ளன. இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்:

இந்திய தேர்தல் ஆணையம்
 
01. தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா
02. போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (திருத்தம்) மசோதா 2021 (குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருப்பு)
03. டெல்லி சிறப்பு காவல் நிலைய திருத்த மசோதா 2021
04. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் திருத்த மசோதா 2021
டெல்லி சிறப்பு காவல் நிலைய மற்றும் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஆகிய 2 திருத்த மசோதாக்களுக்கும் நேற்று முன்தினம் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த மசோதாக்கள் சட்டமாக உள்ளன.

ராம் நாத் கோவிந்த்

05. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்(சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா
06. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா 2021 (குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது, தற்போது இது சட்டமாகும்)
07. உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா 2020
08. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2019
09. அணை பாதுகாப்பு மசோதா
10. தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (திருத்தம்) மசோதா, 2021 (கடந்த 18ம் தேதியன்று குடியரசு தலைவர் ஒப்புதல் அறித்தார். தற்போது இந்த மசோதா இப்போது சட்டமாக உள்ளது.)