ஓபிஎஸ் அணிக்கு தாவ இருக்கும் இபிஎஸ் அணியின் 12 மூத்த நிர்வாகிகள்
ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரின் பின்னால் நின்றவர்கள் எல்லாம் எடப்பாடி பக்கம் சென்றார்கள். இப்போது மீண்டும் ஒவ்வொருவராக ஓபிஎஸ் பக்கம் வர ஆரம்பித்துள்ளார்கள்.
ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிரிந்து நிற்கிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்ன் தீவிர ஆதரவாளராக இருந்து திடீரென்று எடப்பாடி பக்கம் சென்ற மைத்ரேயைன் மீண்டும் ஓபிஎஸ் பக்கம் வந்து விட்டார். அதிமுகவை வழிநடத்த ஓபிஎஸ் தான் சரியான நபர் என்றும் அவர் தெரிவித்தது எடப்பாடியை ரொம்பவே அதிர வைத்திருக்கிறது என்கிறார்கள்.
அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், மைத்ரேயன் திடீரென்று ஓபிஎஸ் பக்கம் போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன எடப்பாடி வட்டாரத்தில்.
மைத்ரேயனை அடுத்து தற்போது ஓபிஎஸ்க்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் வைத்திலிங்கத்தை போல தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ்க்கு மிகவும் பக்கபலமாக நின்றவர் கேபி முனுசாமி. அவர் தற்போது எடப்பாடி அணியில் உள்ள மைத்ரேயனை அடுத்து கேபி முனுசாமியும் ஓபிஎஸ் அணிக்கு தாவ இருக்கிறார். சி.வி சண்முகம் கேபி முனுசாமி இருவருக்கும் இடையே நடக்கும் மோதலால் முனுசாமி அதிருப்தி அடைந்து ஓபிஎஸ் பக்கம் சாய இருக்கிறார் என்று பேச்சு பரவுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே சிவி சண்முகத்திற்கும் முனுசாமிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் கட்சியின் தலைமை அலுவலகத்திலும், டெல்லிக்கு சென்றபோதும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிவி சண்முகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று முனுசாமி அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அவர் ஓபிஎஸ் பக்கம் மீண்டும் தாவ இருக்கிறார் என்று தகவல் .
இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. ஆனால் கே. பி. முனுசாமி, ஓபிஎஸ் பக்கம் போகும் அளவுக்கு தரங்கெட்டு போய் விடமாட்டேன் என்று ஆவேசமாக சொல்லி இருக்கிறார். கேபி முனுசாமி இப்படி சொன்னாலும் பொன்னையன், கேபி முனுசாமி, எம். சி. சம்பத் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி அணியில் இருந்து விலகி ஓபிஎஸ் பக்கம் வர இருக்கிறார்கள் என்கிறார் ஓபிஎஸ்சின் ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன்.