தமிழக அமைச்சரவையில் 2 மூத்த அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அமைச்சரவையில் இரண்டு மூத்த அமைச்சர்கள் மாற்றப்பட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை பணிகளை சரியாக கவனிக்காததால் தலைமை விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அந்த இரண்டு மூத்த அமைச்சர்களையும் மாற்றிவிட முடிவெடுத்து உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல் பரவுகிறது.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. இந்த ஆண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள நீர்வளத் தடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இதனால் இந்த ஆண்டும் சென்னையில் பல பகுதிகள் தத்தளிக்கும் நிலை இருக்கிறது. இதனால் இது முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
தூர்வாரும் பணிக்காக நடப்பாண்டில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு துறைகளின் சார்பில் எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் வெள்ள நீரேற்று நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன . நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏப்ரல் மாதம் இந்த பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் இன்னமும் முடிவடையவில்லை.
இதனால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் உள்ளாராம் . இதற்கிடையில் மூத்த அமைச்சர் ஒருவர் அரசு மீது வெளிப்படையாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் . திமுக பொதுக் குழுவில் முதல்வர் இதை சுட்டிக்காட்டிய வருத்தம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களை நினைத்தால் தூக்கம் வரவில்லை என்று குமுறி இருக்கிறார்.
இது முதல்வரின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெயலலிதாவாக இருந்தால் அமைச்சர்கள் இப்படி நிம்மதியாக தூங்க முடியுமா? காலையில் விடிந்தால் யாருக்கு பதவி இருக்கிறதோ யாருக்கு பதவி இல்லையே என்ற பதட்டத்திலேயே வேலை செய்வார்கள் என்று எதிர் கட்சி தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதால் கடுமையாக அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களையும் மாற்றிவிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு மேற்கட்டமாக அந்த இரண்டு மூத்த அமைச்சர்களிடம் எந்த ஆலோசனையும் பெறக்கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் துறை செயலாளர்களை அணுகுங்கள் என்றும் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.