அப்பல்லோவில் 27 சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டது - ஜெ. பாதுகாவலர் வீரப்பெருமாள் பரபரப்பு

 
pe

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.  அந்த விசாரணை அறிக்கை இன்று தமிழக அமைச்சரவையில் வெளியிடப்பட்டது.   இதை அடுத்து பல்வேறு விஷயங்கள் வெளிவந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

 ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது ஏன் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்ற கேள்வி இருந்து வருகிறது.   ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஒரு முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் ஏன் இயங்கவில்லை? ஜெயலலிதாவின் மரணத்தில் என்ன நடந்தது என்பது இதனால் தெரியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ap

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள்  இயங்கவில்லை என்பது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாளும்  ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். 

 அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியே சிசிடிவி கேமராக்கள் செயலை செயலிழைக்கப்பட்டது.  அப்பல்லோ மருத்துவமனையில் விதிமுறைகளின் படி சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்படுவதாக  என்று மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்தன.

 கேமராக்களை யாரும் அகற்ற சொல்லவில்லை என்று மருத்துவமனை சாட்சியங்கள் சொல்லி இருக்கின்றன.   ஆனால்,  மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டது.   யார் உத்தரவில் அணைக்கப்பட்டது என்று தெரியாது என ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த வீர பெருமாள் கூறியிருக்கிறார்.

aa

 ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லும்போது மட்டும் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறிவுறுத்தலின்படியே சிசிடிவி கேமராக்கள் அனைக்கப்பட்டு இருக்கின்றன.   சிசிடிவி கேமராக்கள் செயலளிக்கப்பட்ட தால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.