தப்பித்தோம் பிழைத்தோம் என்று மதிமுக கூட்டத்தில் இருந்து ஓடிய 5 பேர்!
மதிமுகவின் இருபத்தி எட்டாவது பொதுக்குழு சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன் , தலைமை கழக செயலாளர் துரை வைகோ உள்பட 1284 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் 206 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 138 சிறப்பு அழைப்பாளர்களில் 78 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அதிமுகவில் துரைக்கு பொறுப்பு வழங்கக்கூடாது , கட்சியை திமுக உடன் இணைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்ட சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன் , விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்களும் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோவிடம் எழுப்பிய கேள்விக்கு, நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. அதிருப்தியாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று விட்டார்.
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டும் என அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் சொல்லி வருகின்றார்கள் என்ற கேள்விக்கு, இந்த கட்சி என்றைக்கும் நிலைநாட்டப்பட்டு உறுதியாக இருக்கும் என்றார் .
வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தானே திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கினார் வைகோ .ஆனால் இன்றைக்கு ...?என்ற கேள்விக்கு, பழைய சம்பவங்களை தற்போது கிளற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. திமுகவுடன் நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த இணக்கத்துடன் நாங்கள் சென்று என்று இருக்கிறோம் என்றார்.
துரை வைகோ கட்சிக்காக உழைக்கவில்லை என்ற அதிருப்தியாளர்களின் பேச்சுக்கு, குழப்பம் விளைவிக்கலாம் என்று நினைத்து வந்த 5 பேர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்றுவிட்டார்கள் என்றார்.