கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு! சீனர்களுக்கு விசா வாங்கித்தந்ததில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம்!

 
k

ப. சிதம்பரம் கடந்த 2007 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற ப. சிதம்பரம்  மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.  அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.   மேலும் ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு குறித்தும் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ , அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

p

 இந்நிலையில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு இந்தியா வருவதற்காக விசா வாங்கி தர 50 லட்சம் ரூபாய்  லஞ்சம் பெற்றார் கார்த்தி சிதம்பரம் என்று அவருக்கு எதிராக சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்திருக்கிறது.

 இந்த வழக்கில் தான் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

  ப. சிதம்பரம் தற்போது ராஜஸ்தானில் இருக்கிறார்.  கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருக்கிறார்.  ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறார்.   தன் வீட்டில்  சிபிஐ நடத்தி வரும் ரெய்டில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  கைப்பற்ற படவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்.