ஆளுக்கொரு பாட்டில்! அசத்தும் எடப்பாடி!

 
e

பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டில் தனியாக கொடுத்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடி. ஒரு முறை கையை நனைத்துவிட்டு போய்விடக்கூடாது என்றுதான்,  அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்கும் தனி பாட்டிலை கொடுத்துவிடச் சொல்லி இருப்பதால்  பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேருக்கும் தனித்தனி பாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற என்கிறார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்.

d

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதிமுக பொதுக்குழுவுக்கு அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி இருந்தது.  அப்படி அனுமதி கிடைக்காத பட்சத்தில் பொதுக்குழுவை ஆன்லைன் மூலம் நடத்த எடப்பாடி தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது என்ற தகவல் பரவியது.  ஆனால் பொதுக்குழுக்கான ஏற்பாடுகளை கவனித்துவரும் பெஞ்சமின் இதை மறுத்தார் .  

 கொரோனா விதிகளை பின்பற்றி பொதுக்குழு நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அனுமதி அளித்திருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.  சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் உள்ளே பொதுக்குழுவை நடத்தாமல் இந்த முறை திருமண மண்டபத்திற்கு வெளியே அரங்கு அமைத்து அதில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.  மண்டபத்திற்கு உள்ளே சமூக இடைவெளியுடன் பொதுக்குழு உறுப்பினர்களை அமர வைக்க முடியாது என்கிற காரணத்தினால் தான் மண்டபத்திற்கு வெளியே பொதுக்குழு கூட்டம் நடைபெற ஏற்பாடு நடந்து வருகிறது.  பொதுக்குழு உறுப்பினர்கள் 3000 பேர் இருக்கும் நிலையில் 2500 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் தான் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின்.

p

 அவர் மேலும்,   அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருக்கிறார்.   கொரோனா பரவத் தொடங்கிய போது கொரோனா என்றால் என்ன அது எப்படி பரவும் அதன் தாக்கம் எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாத கொரோனா முதல் அலையின்போது அதை கட்டுப்படுத்துவதற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கடுமையாக போராடியது.  கொரோனா முதல் அலையையும் கட்டுப்படுத்தியது.  அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றியே இந்த பொதுக்குழு நடைபெறும் .

பொதுக்குழுவிற்கு  வருவோருக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் . ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பொதுக் குழு அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் .  இதற்காக பொதுக்குழு கூட்ட  அரங்கத்திற்கு வெளியே  மருத்துவக் குழுவினர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் .  பரிசோதனையில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்தார்.  பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு  கிருமி நாசினி பாட்டில் வழங்கப்பட இருக்கிறது.  ஒரு முறை கையை நனைத்துவிட்டு போய்விடக்கூடாது என்றுதான்,  அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்கும் தனி பாட்டிலை கொடுத்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது என  தெரிவித்திருக்கிறார்.