இந்தி திணிப்புக்கு எதிராக இன்று தனி தீர்மானம்

 
ட்ன்

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக அமித்ஷா குழு பரிந்துரைத்ததை எதிர்த்து இந்த தனி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.  சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு. க .ஸ்டாலின் முன்மொழிகிறார்.

அம்

 தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது.  இரங்கல் நிகழ்ச்சிகளுடன்  நேற்றைய கூட்டம் நிறைவடைந்தது.  அதன் பின்னர் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, ஐ. பெரியசாமி ,பொன்முடி,  துணை சபாநாயகர் பிச்சாண்டி , அரசு தலைமை கொறடா கோவி. செழியன்,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்  மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  முதல்வர் மு. க. ஸ்டாலின்,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , எதிர்க்கட்சி கொறடா வேலுமணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

 இந்த கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியபோது,  சட்டசபை கூடிய இன்று(18) கூடியதும் 2022 -2023 ஆம் ஆண்டு கூடுதல் சாவுக்கான அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான அறிக்கை விவாதிக்கப்படும் என்றார்.

ச்ட

சட்டசபை இன்றும்(18)  நாளையும்(19) முழுமையாக நடக்கும்.  இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு  என்றவர்,  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கை,  தூத்துக்குடி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.  தேவைப்பட்டால் அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதை முதல்வர் மு. க .ஸ்டாலின் முன்மொழிகிறார்.