ஓபிஎஸ் ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார்! ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியே அதிகாரப்பூர்வமாக சந்திப்பார் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் இருக்கிற திரளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொத்து வரி உயர்வு, மின்சாரம் கட்டணம் உயர்வு கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரிசையில், திமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 27-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக, அதிமுக சார்பில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
எடப்பாடி கே. பழனிச்சாமி டெல்லிபயணம் குறித்து, வேண்டுமென்றே தவறான தகவல்கள் செய்தியாக பரப்பிவிடப்படுகிறது. சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமியே சந்தித்து தமிழகத்தின் நடக்கும் பிரச்சினைகள் குறித்து மனு அளிப்பார். ஓ.பி.எஸ். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார். கட்சியிலேயே இல்லாத அவர் புதிய நிர்வாகிகளை நியமிப்பது காமெடியாக உள்ளது” என்றார்.