அதிமுக மாணவர் அணி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

 
eps

ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில். கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் வரும் 23ஆம் தேதி பொது குழு மற்றும் செயற்குழு குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது கட்சி அலுவலகத்திற்கு வெளியே திடீரென ஆயிரம் விளக்கு சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது அவருடன் வந்த சிலர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

பெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  | CM Edappadi Palanisamy celebrates Mother's day - Tamil Oneindia

 

இதை அடுத்து மற்றொரு தரப்பினர் ஓபிஎஸ் தான் அதற்கு வரவேண்டும் என்று தங்கள் குரலை எழுப்பினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு அவர்களை ஆசுவாசப்படுத்தினார். இன்றும் இரண்டாம் நாளாக ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர் விஜயகுமார் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் மாவட்ட வாரியாக நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பலரிடமும் கருத்து வந்தது .அதன் அடிப்படையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறினோம். நான்கரை ஆண்டு காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சரியாக இருக்கும் என்று  மாணவரணியின் கருத்து. எங்களுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்தோம்” எனக் கூறினார்.