எடப்பாடிக்கு எதிராக அதிமுக பெண் நிர்வாகி ஏற்படுத்திய பரபரப்பு

 
ஏப்ப்

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே அந்த இடத்தில் வேறு யாரும் இனி வரக்கூடாது என்று அந்த பதவியை அப்படியே வைத்து விட்டு, கட்சி தலைமைக்காக ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் வகுக்கப்பட்டு அதில் ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அந்த பதவிகளில் இருந்து வந்தனர்.

ஜ்ஜ்ஜ்

 இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தூக்கி கடாசி விட்டு பழையபடி பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்து தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  அடுத்து நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சிகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.

 இந்நிலையில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்று நெல்லை அதிமுக நிர்வாகி தமிழரசி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 எடப்பாடி பழனிச்சாமியோ தான் பொதுச்செயலாளர் என்றும் அதனால் ஓபிஎஸ் உட்பட அவரின் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்.   ஓ. பன்னீர்செல்வம் தான் இன்னமும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்றும் தன்னை கட்சியை விட்டு நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லி,  எடப்பாடி பழனிச்சாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்.  

னொ

 தான் இன்னமும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்று சொல்லி வருகிறார் ஓ. பன்னீர் செல்வம்.   இதை உறுதி செய்யும் விதமாக முதல்வர் மு. க. ஸ்டாலினும் இன்று,   ’’அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 இந்த சூழலில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று நெல்லை மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தமிழரசி மாவட்டம் முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  அதனால் நெல்லையில்  அதிமுகவினருடைய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.