திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான் -எடப்பாடி பழனிச்சாமி

 
e

ஆளும் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி .

முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்று ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   தமிழகத்தில்  அதிமுக எதிர்க்கட்சி என்றாலும் பாஜகதான் எதிர்க்கட்சி என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சொல்லி வருவது குறித்து,  பாஜக எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது என்று கட்சியினர் தொடர்ந்து சொல்லி வருவது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியிடம்  கேள்வி எழுப்பப்பட்டது.

ட்

 அதற்கு அவர்,   தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் என்றார்.   தொடர்ந்து அது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   ஆனாலும் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்றார்.

 மேலும்  அவரிடம் ,  சசிகலா குறித்த கேள்விக்கு,   சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை.  அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

 தருமபுரம் ஆதீனத்திற்கு வந்திருந்ததால் தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்த கேள்விக்கு,   ஆண்டாண்டு கால வழிமுறைகளில் கோயில் வழிமுறைகளில் தலையிடக்கூடாது.   ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது.   500 ஆண்டு காலமாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது .   இதற்கு திமுக அரசு தடை விதித்தது .  மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தமிழக அரசு இறங்கி வந்து அனுமதி கொடுத்தது.   திமுக அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.   எந்தெந்த துறையின் வருமானம் வரும் என்று மட்டுமே பார்க்கின்றார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.