பிரதமர் மோடி வளர்ச்சியை நம்புகிறார், காங்கிரஸ் மக்களை பிளவுப்படுத்துகிறது... அமித் ஷா

 
அமித் ஷா

பிரதமர் மோடி வளர்ச்சியை நம்புகிறார் ஆனால் காங்கிரஸ் மக்களை பிளவுப்படுத்துகிறது என்று இமாச்சல பிரதேச மக்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் சிர்மவுரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: வம்ச அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டாமா? அரசியலில் குடும்பவாதத்தை ஒழிக்கும் பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். அதிகார ஆசையில் காங்கிரஸால் நமது பாரம்பரியத்தை மதிக்க முடியவில்லை.

மோடி

பிரதமர் மோடி வளர்ச்சியை நம்புகிறார், காங்கிரஸ் மக்களை பிளவுப்படுத்துகிறது. வாக்கு எண்ணும் நாளில் பைனாகுலரை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் தங்களது மூத்த தலைவர்களை தேட வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் நூற்றுக்கு நூறு சதவீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற இலக்கை மாநிலம் ஏற்கனவே எட்டியுள்ளது. வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டாம், குடும்ப அரசியலுக்கு இடமில்லை.

காங்கிரஸ்

ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 குறித்து காங்கிரஸ் அமைதியாக இருக்கும். இமாச்சல பிரதேசத்தின் பழங்குடி சமூகமான டிரான்ஸ் கிரி அனுபவிக்கும் வலிகள் தனக்கு தெரியாது. நாங்கள் 389 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியுள்ளோம், 1.60 லட்சம் மக்கள் பழங்குடியினர் அந்தஸ்தைப் பெறுவார்கள். பழங்குடியினப் பகுதிகளுக்காக  நடத்தப்படும் திட்டங்களால் அவர்கள் பயனடைவார்கள். காங்கிரஸ் கட்சி பொறாமை கொண்டது. காங்கிரஸ் தலித் சமூகத்தை தூண்டி விடுகிறது. இநத மாநிலத்திதை சேர்ந்தவர்கள் அதிகளவில் ராணுவத்தில் இணைகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.