அனுமதி பெற்று பிரதமரை ஈபிஎஸ், ஓபிஎஸ் நேற்று சந்தித்தனர்- அண்ணாமலை
சென்னை தியாகராயநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது .
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “வன்முறை எப்போதும் தீர்வு அல்ல.. காவல்துறையினர் பாஜகவினருடன் நேற்று தவறான முறையில் நடந்து கொண்டனர். மாவட்ட sp , ig யுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசியலை அரசியலாக எதிர்கொள்வோம். காவல்துறையினருக்கு எதிராக செயல்பட மாட்டோம் , அவர்கள் ஆளுங்கட்சியினரால் ஏவி விடப்பட்டனர். சவாலான காலம் இது , களம் தயாராக இருக்கிறது , திமுகவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் . எங்கள் சித்தாந்த எதிரி திமுக.
உலகின் மிகப்பெரிய ஜோக், ராஜிவ் கொலை குறித்த தமிழக காங்.நிலைப்பாடு . திமுகவின் பீ டீமாக தமிழக காங். செயல்படுகிறது. திமுக சீட் கொடுக்காமல் தங்களை மிரட்டுவதாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறிவிடலாம். முதலியார் , செட்டியார் , இசுலாமியர் உட்பட 70 சமூகங்கள் முற்பட்ட பிரிவில் இருக்கிறது. ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டுமானது என்று திமுக கண்ணை மூடிக்கொண்டு கூறி வருகிறது. திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 4,5 கூட்டணி கட்சிகளை வைத்து கூட்டம் நடத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டம் என திமுக கூறுவது நாடகம், வேடிக்கையாக இருக்கிறது.
அனுமதி பெற்று பிரதமரை எடப்பாடி, ஓபிஎஸ் நேற்று சந்தித்தனர். கட்சியுடன்தான் எங்கள் கூட்டணி, கட்சியில் தலைவர்கள் மாறத்தான் செய்வர். தலைவர்கள் யார் என்பதை கட்சியின் தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள். அதிமுகவில் செயற்குழு , பொதுக்குழுவில் தொண்டர்கள் இணைந்துதான் அக்கட்சியில் தலைவர்களை தேர்ந்தெடுத்தனர். தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் எங்களது தேசிய தலைமையின் வழிகாட்தல்படி நாடாளுமன்ற குழு கூட்டணி வைக்குமாறு கூறும் . கட்சியின் மாநிலத் தலைவராக எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இருக்காது” எனக் கூறினார்.