"மக்கள் கால்ல விழுங்க கதறுங்க.. எனக்கு தாமரை மலரனும்” - அண்ணாமலை ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

 
அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. தங்களின் பலம் என்னவென்று அறிவதற்காக தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார். எனினும் 2024 மக்களவை தேர்தலை அதிமுகவுடன் சேர்ந்தே பாஜக சந்திக்கும் என தெளிவுப்படுத்தியுள்ளார். இது தற்காலிக பிரிவு தான். கூட்டணி தொடரும் என்பதே அவரின் கருத்து. இதன் காரணமாக இரு கட்சிக்காரர்களும் தனித்தனியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் இரு கட்சியினரும் திமுகவை குறிவைத்தே பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் இன்று கோவை மாநகர், மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வடவள்ளியில் இன்று நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களிடையே மத்தியில் பேசிய அண்ணாமலை, "தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நமக்கு 11 நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆகவே அனைவரும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும். மக்களை வீடுகளுக்கே சென்று சந்தியுங்கள். அவர்களிடம் கலந்துரையாடுங்கள். காலில் விழுந்து கூட வாக்கு சேகரிக்க தயங்க கூடாது. கோவையில் தாமரையை அக்கா வானதி மலர வைத்தார்.

அவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நீங்களும் மலர வைக்க வேண்டும்.  நகர்புறங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை மிக உன்னிப்பாக கவனிக்கின்றனர். எனவே, உங்களது புத்திகூர்மை மூலம் அனைத்து மக்களையும் நீங்கள் சென்றடைய வேண்டும். அதற்கு உங்கள் கையில் இருக்கும் செல்போன் மிக முக்கியமான ஆயுதம். காரில் செல்லும்போது கூட செல்போனில் மக்களிடம் பேசுங்கள். 

make-full-use-of-social-networking-sites-to-reach-people

ஒருநாளும் மக்களோடு பேசாமல் இருக்க வேண்டாம். ஊரின் முக்கிய தலைவர்கள், சமூகத்தில் முக்கிய தொண்டாற்றியவர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என தினமும் 50 முதல் 100 பேரிடம் பேசுங்கள். அதைத் தாண்டி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என அனைத்து சமூக வலைதளங்களையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள். கட்சி தலைமையகத்திலிருந்து வரும் வீடியோக்களையும் உங்களின் பிரச்சாரங்களை மக்களுக்கு அனுப்பிவையுங்கள்” என்றார்.