இன்று மாலைக்குள் அந்த ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் - மீண்டும் கெடு விதித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

 
sa

திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   இந்த நிலையில் அண்ணாமலையின் கைக்கடிகாரம் 5 லட்சம் ரூபாய் என்றும் அதை கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  இதற்கு விளக்கம் அளித்து இருந்த அண்ணாமலை ,  பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பாக வாங்கியது என்றும்,  அந்த கை கடிகாரத்திற்கு பில் மட்டுமல்லாமல் தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் வெளியிட தயார்.   தான் வெளியிடும் தகவலுக்கு மேல் ஒரு பைசா இருந்தால் கூட  சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க தயார் என்றும் பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

a

 இதை அடுத்து திமுகவினர் அந்த கைக்கடிகாரம் கர்நாடகத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது ஒரு காபி கடை உரிமையாளர் வாங்கி தந்தது. அந்த கைக்கடிகாரத்தின் பில் அந்த காபி கடை வசம்தான் இருக்கிறது.   எதற்காக இவ்வளவு விலை உயர்ந்த  அந்த கடிகாரத்தை அவருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் ?என்று கேள்வி எழுப்பி வந்தனர்.   சிலர்,  அந்த காபி கடை சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் அண்ணாமலை அப்போது தலையிட்டு முடித்து கொடுத்ததார்.  அதற்கு பரிசாக அந்த கைக்கடிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் கூறி வருகின்றனர்.

 இந்நிலையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது,  டுவிட்டரில் நடந்து வந்த இந்த  கைக்கடிகாரம் மோதல் குறித்து அண்ணாமலை,   நான் மக்கள் பிரதிநிதி இல்லை.  கவுன்சிலராகவோ, ஊராட்சி மன்ற தலைவராகவோ ,எம்எல்ஏ ஆகவோ எம்பியாகவோ இல்லை.  அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட நான் வருமானமாக இதுவரை பெறவில்லை.   ஆனாலும் என்னிடம் நான் அணியும் வாட்ச் குறித்து திமுக கேட்கிறது.

 இதற்காகத்தான் நான் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன்.   நான் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது ரபேல் போர் விமானம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று நினைத்தவன்.  இதன் காரணமாகத்தான் ரபேல் நிறுவன கடிகாரத்தை வாங்கி அணிந்து இருக்கிறேன்.   திமுக செய்யும் குடும்ப அரசியலை முழுமையாக எதிர்ப்பதால் என் மீது இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.   நான் எனது முழு சொத்து விவரங்களை மட்டுமல்லாது என் அப்பா ,அம்மா ,மனைவி ,உடன் பிறந்தோர் என்று அனைவரின் வங்கி கணக்குகளையும் வெளியிடப் போகிறேன். 

aa

 திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால் இதை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.  வாங்கிய ரசீது,  என் வாழ்நாள் வருமான வரி அனைத்தையும் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.   இதே போல் வருமான விவரங்களையும் அசையும் அசையா சொத்துக்களின் விபரங்களையும் திமுகவினரும் திமுக தலைவர்களும் பொது வெளியில் வெளியிட தயாரா என்று மீண்டும் சவால் விடுத்திருந்தார்.

இதுகுறித்து  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது,  அண்ணாமலை வாட்ச்  குறித்தும் அவரது சவால் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,  தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தேவையில்லாமல் ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் குற்றம் சாட்டி வருகிறார் . நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்றுதான்.   தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னர் வாங்கினாரா வாங்கினாரா என்றால் பில்லை காட்டச் சொல்லுங்கள் என்றா. 

 அவர் மேலும் ,  மடியில் கணமில்லை என்றால் வலியில் பயம் இருக்காது.  மடியில் அவருக்கு கணம் இருக்கிறது . பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் .  எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்கிற ஆதாரத்தை வெளியிட வேண்டும் .  அந்த பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும் என்றும் மீண்டும் கெடு விதித்தார். 

 அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடந்து வருகிறது.  அந்த பில்லை வெளியிடும்போது அடுத்த கட்ட குற்றச்சாட்டுகளை நான் தெரிவிப்பேன் என்றும் சொல்லி  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.