நேற்று அரசியலுக்கு வந்த பரதேசி எல்லாம் நமக்கு சவால் விடுவதா? - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

 
வி

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது.  அப்போது நாங்கள் மூன்றாவது கட்சியாக தான் இருந்தோம்.  ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார்.   திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று அழுத்தமாகச் சொன்னார் ஆர். எஸ். பாரதி.

ர்

 திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி , மதுரை மாநகர மாவட்ட திமுக சார்பில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது,    ’’காவல்துறைக்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது நம்மிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.  இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை . நான் பேசுவதை தவிர்த்து விட்டு வெட்டி ஒட்டி போடுவதை சிலர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று அரசியலுக்கு வந்த பரதேசி எல்லாம் நமக்கு சவால் விடுவது வேடிக்கையாக இருக்கிறது’’என்று ஆவேசப்பட்டார்.

தொடர்ந்து பேசிய பாரதி,  ‘’கோயம்புத்தூர் வழக்கில் மாற்றுக் கருத்துக்களை சொல்லி வருகிறார் அண்ணாமலை.  இதே வேறு ஒரு கட்சியாக இருந்தால் இந்நேரம் அண்ணாமலையை என்.ஐ.  குற்றவாளியாக சேர்த்திருக்கும்.    இப்படி கருத்துக்களை மாற்றி மாற்றி சொல்லுகின்ற போது குளறுபடி ஏற்படுமா ஏற்படாதா? குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களே?  இவர் ஐபிஎஸ் படித்தாரா இல்லை போலீஸ் சான்றிதழ் வாங்கினாரா? கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலை தான் காரணம்.  

அ

 திட்டமிட்டு அண்ணாமலை ஒரு சதி செய்து வருகிறார்.  அவரே குண்டு வைத்து ஆட்களை செட் செய்கிறாரா என்பது தெரியவில்லை என்றவர்,   குஜராத்தில் 150 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள்.. அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த கான்ட்ராக்டர் பிஜேபிக்கு டொனேஷன் கொடுத்தவர் தான்.. நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.   நான்கு நாட்களுக்காக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை . பெற்ற லஞ்சம் எவ்வளவு?  பிஜேபியை ஒழிக்கும் அளவுக்கு நாம் தயாராக வேண்டும்’’ என்றார்.

அவர் மேலும்,  ’’தலைவர் கலைஞர் அரசியல் வந்ததற்கு முக்கிய காரணம் இந்திய எதிர்ப்பு போராட்டத்திற்காகத்தான்.  1960 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியை நுழைக்க  வேண்டும் என்று மத்திய அரசாங்கம் நினைத்த போது கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று அப்போது அறிஞர் அண்ணா சொன்னார். 
  தமிழ்நாட்டில் இந்தி என்பது எங்குமே கிடையாது.  ஒரு காலகட்டங்களில் திரையரங்குகளில் இந்தி படம் ஓடும் . இப்பொழுது இந்தி படம் ஓடுவதில்லை . இது எல்லாம் வயிற்று எரிச்சல் தான் டெல்லிக்காரர்களுக்கு.  

வ்

 அரசியலில் காளிமுத்து மிகப்பெரிய தலைவராக சபாநாயகராக இருந்து மறைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான்.  இந்தி எதிர்ப்பு தியாகிகளை மதித்த ஒரே கட்சி திமுக தான் என்றார் .

மேலும்,   தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு. க. ஸ்டாலின் இந்தி எதிர்த்து கண்டன தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.  ஆனால் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் இருந்தபோது இந்தியை எதிர்த்த 86 ஆம் ஆண்டில் பேராசிரியர் உள்ளிட்ட 10 பேரை சட்டமன்ற பேரவையிலிருந்து நீக்கினார். அன்றைக்கு சபாநாயகராக இருந்தவர் எம்எஸ் பாண்டியன்.  ஆனால் இன்று இந்திய எதிர்ப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின் என்றார்.

எத்தனையோ முறை திமுக அழிந்து விடும் என்று நினைக்கிறார்கள்.   ஆனால் நிச்சயமாக அது ஒரு பொழுது முடியாது.  விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது.  அப்போது நாங்கள் மூன்றாவது கட்சியாக தான் இருந்தோம்.  ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.