குஜராத் மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிப்பது வீண் வேலை.. அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸூக்கு வாக்களிப்பது வீண் வேலையே தவிர மாநிலத்தின் நலனுக்காக அல்ல என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்துக்கு 2 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை சென்றார். தனது குஜராத் பயணத்தின் கடைசி நாளான நேற்று ராஜ்கோட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உளவுத்துறை அறிக்கையின்படி, ஆம் ஆத்மி வாக்குகளை வெட்டுவதற்கு பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் ஒன்றிணைந்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடந்தால், மாநிலத்தில் ஆம் ஆத்மி  கட்சி ஆட்சி அமைக்கும், ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும். உளவுத்துறை அறிக்கை வெளியானதையடுத்து பா.ஜ.க. கடும் அதிருப்தி அடைந்துள்ளது. 

ஆம் ஆத்மி

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உயர் மட்டக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய தொடங்கியுள்ளன. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்காக காங்கிரஸை வலுப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. குஜராத்தில் ஆம் ஆத்மியை தோற்கடிக்கும் முயற்சியில் பா.ஜ.க.வும், காங்கிரஸூம் ஒன்றிணைந்துள்ளது. ஆம் ஆத்மி வாக்குகளை சாப்பிடுவதற்கு (பெறுதல்) காங்கிரஸூக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு பசுவை பராமரிக்க ரூ.40 வழங்கப்படுகிறது. இதில், ரூ.20ஐ மாநில அரசும், ரூ.20ஐ மாநகராட்சியும் வழங்குகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பசுவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.40 வழங்குவோம். பால் கறக்காத பசுக்களுக்கும், சாலையில் சுற்றி திரியும் மாடுகளுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடைகள் தங்கும்  இல்லங்கள் கட்டப்படும்.  

காங்கிரஸ்

மாநிலத்தில் உள்ள பசுக்களின் நலனுக்கான ஆம் ஆத்மி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. அவர்களும் (வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) பா.ஜ.க.வில் இணைவார்கள்.காங்கிரஸூக்கு வாக்களிப்பது வீண் வேலையே தவிர குஜராத்தின் நலனுக்காக அல்ல. பா.ஜ.க. மீது வருத்தம் உள்ளவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். டெல்லி மற்றும் பஞ்சாப் சாதனைகளை (அந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி வெற்றி) முறியடிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் மக்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.