பாஜகவில் நான் இருப்பதை கண்டு பெருமைபடுகிறேன் - அண்ணாமலை
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைந்தகரை பச்சையப்பாஸ் கல்லூரி அருகே நடைபெற்றது.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி ஸ்ரீனிவாசன், நைனார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு நாகராஜன், மற்றம் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று ஒரு மிகப்பெரிய பொதுத் தேர்தலில் எந்த கட்சியினுடைய வெற்றியை கொடுத்தது போல இந்தியாவிலும் கூட நம்முடைய கட்சியை வெல்ல முடியாத கட்சியாக மாறி இருக்கு. ஐந்தாண்டு காலம் நம்முடைய உழைப்பு ஊதியமாக தேர்தலில் வெற்றியை கொண்டு வந்திருக்கிறோம். எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் இன்று இந்தியாவில் சில இடங்களில் இடை தேர்தல் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக கோவாவில் ஆட்சியில் அமர்ந்துத்துள்ளோம்.ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற தான் போகிறது. அதில் நாங்கள் வேட்பாளராக அறிவித்து இருக்கும் வேட்பாளர் அதிக வாக்கு சதவீதம் பெற்று வெல்வார்.
எப்போது குடியரசு தலைவருக்கான தேர்தல் வேட்பாளரை திரெளபதி முர்மு என்று அறிவித்தோமோ அப்போதே தமிழக முதல்வருக்கு காய்ச்சல் வந்து விட்டது. இந்த மாதிரி சித்தார்ந்தம் இருக்கும் கட்சியில் நான் இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன். மோடியை போல் அடித்தட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக யோசிக்கும் குட்டி மோடியாக வாழ வேண்டும் என்றால் தனி மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே உருவாக முடியும். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி மக்கள் கட்சியா இல்லை குடும்பம் கட்சியா என்றே தெரிய வில்லை. எது அரசு எது குடும்பம் என்றே தெரியவில்லை. தற்போது காஞ்சாவின் தலைநகரமாக சென்னை விளங்கி வருகின்றன. தமிழக பாஜக ஆட்சி அமைத்ததும் பொய்களைக் கூறி ஆட்சி நடத்தும் அனைவர்களையும் குஜராத் போல லீபரல் முறையில் கைது நடக்கும். தமிழக முழுவதும் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணத்தில் இருக்கும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பார்க்கும் பொழுது இது போன்ற தலைவர்கள் இருக்கும் கட்சியில் நாமும் இருக்கிறோம் என நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் கண்டிப்பாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக சார்பில் வெற்றிப்பெறுவர். நமது ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் நடக்கும்” எனக் கூறினார்.