மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி.. பா.ஜ.க. எம்.பி.

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பா.ஜ.க. இணைந்து போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பிஷ்ணுபூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் சௌமித்ரா கான். இவர் எதிர்வரும் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியுடன் பா.ஜ.க. இணைந்து போட்டியிட வேண்டும் என்று பேசியிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. பங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தல் பா.ஜ.க. எம்.பி. சௌமித்ரா கான் பேசுகையில் கூறியதாவது: 

சௌமித்ரா கான்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ஜம்தாரா கும்பலுடன் தொடர்பில் உள்ளதால், எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறார். யாரேனும் தேர்தலை சீர்குலைக்க முயன்றால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். அனைத்து சட்டவிரோத பரிவர்த்தனைகளையும் நாங்கள் வெளிப்படுத்துவோம்.

பா.ஜ.க.

எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பா.ஜ.க. இணைந்து போட்டியிட வேண்டும். பா.ஜ.க.வின் கரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் திருமண நிலையை கிண்டல் அடித்தார். உங்களை (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி)  எப்படி குமாரி  அல்லது ஸ்ரீமதி என்று அழைக்க வேண்டும்? என்று சௌமித்ரா கான் தெரிவித்தார்.