பாஜக - டிஆர்எஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்: போதானில் பதற்றம்

 
ப்

 சத்ரபதி சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இரு கட்சியினர் இடையே தெலுங்கானாவில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.    இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் டிஆர்எஸ் ஆட்சி நடந்து வருகிறது.  இதற்கு மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது பாஜக.  

டெ

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதான் பகுதியில் பாஜக சார்பில் அண்மையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை அமைக்கப்பட்டது.   இச்சிலையை அப்பகுதி பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி இன்று திறந்து வைப்பதாக இருந்தது.   இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வந்தபோது,  அங்கே திடீரென்று வந்த டிஆர்எஸ் தொண்டர்கள் பாஜகவினரின் வேலைகளைப் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

 இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது .  பாஜகவினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.   இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.  பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.  தற்போது மேற்கொண்ட அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு போதான் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.