பிரதமர் மோடியின் தாயை கேலி செய்த ஆம் ஆத்மி தலைவர் - பாஜக கண்டன வீடியோ

 
mo

பிரதமர் மோடியின் தாயார் பற்றி குஜராத் மாநில ஆம் ஆத்மி  தலைவர் கோபால் இத்தாலியா,  கேலி செய்து பேசும் வீடியோவை குஜராத் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.    இதை தொடர்ந்து பாஜகவினர் கோபால இத்தாலியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா.   இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில்,  பிரதமர் நரேந்திர மோடி மீது தரக்குறைவான கருத்துக்களை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.   இதையடுத்து கோபால் இத்தாலியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து நேரில் ஆஜராகி இன்று விளக்கம் அளித்தார் கோபால் இத்தாலியா. 


இதைத் தொடர்ந்து அவர் சில மணி நேரம் போலீஸ் காவலில்  வைக்கப்பட்டிருக்கிறார்.

 இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் பற்றி கோபால் இத்தாலியா கேலி செய்து பேசும் வீடியோவை குஜராத் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் பிரதமர் மோடியின் தாயாரை கோபால் இத்தாலியா கேலி செய்து பேசியதாக பாஜக தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.