மீண்டும் பாஜக ஆட்சி! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

 
b

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்று தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 குஜராத் மாநிலம் பிரதமர் மோடி  முதல்வராக இருந்த மாநிலம்.   பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பிறந்த மாநிலம் . அதனால் அம் மாநிலத்தின் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   இந்த குஜராத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த ஒன்னாம் தேதி மற்றும் இன்று ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ்  ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டன.

g

 பாஜக, காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என்று குஜராத்தில் மும்முனை போட்டி இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.  கடந்த 1ம் தேதி குஜராத் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருந்த நிலையில்,  இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் , தனியார் தொலைக்காட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.  அதில் குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று கருத்து கணிப்புக்கு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 குஜராத்தில் மொத்த இடங்கள் 182.  இதில் பாஜக 117 முதல் 148 இடங்கள் வரைக்கும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளன என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  காங்கிரஸ் 30 இடங்களில் இருந்து 51 இடங்கள் வரைக்கும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களில் இருந்து 13 இடங்கள் வரைக்கும் பெற வாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜகவுக்கு 32 தொகுதி முதல் 40 தொகுதி வரைக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும்,  காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் முதல் 34 இடங்கள் வரைக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும்,  ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும்  தேர்தலுக்குப் பிந்தைய தனியார் தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

 இதனால் பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.