ஐயா பாவம் கலைஞர் டிவி, 'கம்மிகளை' காணோமே, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ?- விளாசும் பாஜக
காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் பாஜகவை தொடர்ந்து வறுத்தெடுத்து வந்தன. ஐந்துமாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தன. ஆனால், ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநில தேர்தலில் பாஜக வென்றுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் , உத்தரகாண்ட், மணிப்பூர் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’இன்றைய ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகாவது அழுது, புலம்பி அராஜகம் செய்வதை விடுத்தது ஆக்கபூர்வமாக எதிர்கட்சிகளாக செயல்பட வேண்டும். இல்லையேல் மக்கள் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளுவார்கள்’’என்கிறார்.
மேலும், ’’இந்த தேர்தல் முடிவுகளில் 'கம்மிகளை' காணோமே’’ என்று தேடுகிறார்.
’’இரண்டே மாநிலங்களில் மட்டுமே இப்போது காங்கிரஸ் ஆட்சி. ராஜஸ்தான் , சத்தீஸ்கர் . கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ?’’ என்று கேட்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
அவர் மேலும், ’’இந்தியாவில் பாஜக 5 ல் 4 ல் மாநிலங்களில் வெற்றி உண்மையை ஏற்க முடியா கலைஞர் நியூஸ் தென் கொரிய அதிபர் தேர்தல் முடிவுகளை வெளியிடும் பரிதாபம் ஐயா பாவம் கலைஞர் டிவி’’ என்கிறார்.
தொடர்ந்து எஸ்.ஆர்.சேகர்,
‘’4 மாநிலங்களில் பிஜேபி வெற்றி....பிஸ்கோத்து
கண்ணில்படாது
கவலை இல்லை
பொழைச்சு போங்க
ஆங்ங்ங்....
பஞ்சாபில் பிஜேபி படுதோல்வி
ஆம்ஆத்மி அமோகம்
என்ன... இன்றைய விவாத தலைப்பு... சரியா?
இப்டியே சொல்லுங்க....
அப்பதான் மீண்டும் மீண்டும் பாஜக வெற்றிபெறும்’’ என்கிறார்.