கடுப்பான உதயநிதி - பீஸ்ட் ஆடியோ விழா ரத்து ஆன பின்னணி
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரசிகர்களை திரட்டி மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அரசியல் கட்சியின் மாநாடு போல் இருந்தது என்று விமர்சிக்கப்பட்டது.
விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னே அப்படியென்றால், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்துவது என்று விஜய் தரப்பு முடிவு செய்திருக்கிறது. விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் அரசியல் கட்சி மாநாட்டை போலவே நடத்திவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென்று பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என்று உறுதியாகியிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டதாக பட நிறுவனத்தின் சார்பில் தகவல் வருகிறது . ஆனால் அது உண்மை இல்லை. உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவினால்தான் இந்த ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் திடீரென்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். 2024ஆம் ஆண்டில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல், 2026 ஆம் ஆண்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை முன்வைத்து விஜய் அரசியலில் இறங்கினால் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்க அந்த சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் பேசியதாக தகவல்.
விஜய்யும் பிரசாந்த் கிஷோரும் ஹைதராபாத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே உதயநிதிக்கு தகவல் வந்திருக்கிறது. நமக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் திடீரென்று விஜய் பக்கம் தாவி விட்டாரே, விஜய்யும் திடீரென்று பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்துக் கொண்டு தனிக்கட்சி என்று போய்விட்டால் நமக்கு சிக்கலாகிவிடும் என்று நினைத்தபோது கடுப்பான உதயநிதி, விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. அதனால் தான் உடனடியாக பீஸ்ட் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ்க்கு போன் போட்டு, பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடத்த வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார். இதன் பின்னர்தான் சன் பிக்சர்ஸ் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்திருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் வெளிநாட்டு சொகுசு கார் வழக்கிலும் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.