பிச்சைக்காரர்களும் நாங்களும் ஒன்றுதான் - அமைச்சர் நாசர்
பிச்சைக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அது எப்படி தெரியுமா? என்று சொல்லிவிட்டு அதுகுறித்து விளக்கம் கொடுத்தார் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி பகுதியில் மருத்துவ கல்லூரி சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஊரக சுகாதார மையம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று பேசினார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் அவர் அது குறித்து பேசினார். அதாவது பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் பிச்சைக்காரர்கள் தான் என்று சொன்னார். பிச்சைக்காரர்கள் ஐயா அம்மா என்று சொல்லி காசு பணம் கேட்கின்றனர். அரசியல்வாதிகள் நாங்களோ அய்யா அம்மா என சொல்லி ஓட்டு பிச்சை கேட்கிறோம். அதனால் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான் என்று சொன்னார்.
அமைச்சர் இப்படி பேசியபோது அரங்கில் கரவொலி எழுந்தது.