6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு விறுவிறு

 
எ

 ஆறு மாநிலங்களில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 தெலுங்கானா,  அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மராட்டியம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

எல்

 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்த இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  அதன்படி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.   இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.   நவம்பர் 6ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

 தெலுங்கானாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையேயான முனுக்கோடு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இருக்கிறது.  298 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  இந்த முனுக்கோடு இடைத்தேர்தல் தெலுங்கானா அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.