எடப்பாடிக்கு அழைப்பா? நடந்தது என்ன?

 
pp

 தேர்தல் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருக்கும் தேர்தல் ஆணையம்,   அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிவரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பிலும் தங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள்.   நடந்தது என்ன என்பது குறித்து விளக்குகிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

tm

  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன்,  ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. அத்துடன்  இந்த பணியை அடுத்த ஆண்டு 31.3. 2023 க்குள் முடிக்கவும்  தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது போன்ற  போலி வாக்காளர் அட்டைகளால் ஏற்படும்  குழப்பங்களை  தடுக்கவே இந்த நடைமுறை வருகிறது.

இதுகுறித்து ஆலோசனை நடத்த,  நாளை  தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதில்  அதிமுகவுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின்  தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

pu

 அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் , இன்பத்துறை ஆகியோர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதிமுகவில் ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகள் இருக்கும் நிலையில்  எடப்பாடி ஆதரவாளர்கள் இதை பெருமையாக சொல்லி வந்த நிலையில்,  அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம்  அழைப்பு விடுத்திருக்கிறது. அதிமுக  சார்பில்  கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருக்கிறார் என்று தகவல் பரவியது.  

இதுகுறித்து புகழேந்தி,    தேர்தல் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது.   ஆனால் தேர்தல் ஆணையம் யார் பெயரையும் அதில் குறிப்பிடவில்லை .  அதிமுக தலைமை அலுவலகம் என்ற முறையில் அந்த முகவரிக்கு கடிதம் வந்திருக்கிறது.   இந்த கடிதத்தை அலுவலகத்தில் இருக்கும் பியூனோ, செக்யூரிட்டியை வாங்கினால் அவர்களா ஆலோசனை கூட்டத்திற்கு போக முடியும் .  அதனால் தான் ஓபிஎஸ் தரப்பில் போகலாம் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.   அதற்குள்ளாக வேறு மாதிரி திரித்து எடப்பாடி  தரப்பினர்,    எடப்பாடியைத்தான் தேர்தல் ஆணையம்  அழைத்தது என்பது போல் ஒரு பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள் அது மிகத் தவறான ஒன்று என்கிறார்.