அவருடன் நெருக்கமாக இல்லாவிட்டால் வளரமுடியாது - ரகசியம் உடைத்த காயத்ரி ரகுராம்

 
g

பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது.  இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும் என்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

ga

அவர் மேலும்,  பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை.   புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் அதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் உன்னை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள். நீங்கள் வளர்ப்பு மகனின் தந்தையுடன் நெருக்கமாக இல்லாவிட்டால், நீங்கள் வளர மாட்டீர்கள். வளர்ப்பு மகன் உன்னை தந்தையின் அருகில் செல்ல அனுமதிக்க மாட்டான். சிறிய ரகசியம் என்று சொல்லி இருக்கிறார்.

காயத்ரி ரகுராமுக்கும் அண்ணாமலைக்குமான மோதலில் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  பதிலுக்கு திமுகவினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து வரை நடத்துகிறார் என்று காயத்ரி  மீது அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். 

gyi

 இந்த நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருந்தார் காயத்ரி ரகுராம்.  அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை .  பாஜகவில் இருந்து முழுமையாக தான் நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம்,   என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரை கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி. என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி.  என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. 

 என்னால் திரும்ப கொண்டு வர முடியாத இளமைக்காலத்தை பறித்ததற்கு நன்றி.  என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி.  பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி.   கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார்.  நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.   இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.