முதல்வர் குறித்த பேச்சு- பாஜக நிர்வாகி வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்

 
ja

முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நள்ளிரவில் அவரது வீட்டில் போலீசார் சுற்றி வளைத்ததால்,   பாஜக நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்ததால் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி.   இப்பகுதியில் கடந்த 6ஆம் தேதியன்று நடைபெற்ற பாஜக நிகழ்வில் கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்று பேசினார்.  

ja

 அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஜெயப்பிரகாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இதையடுத்து நேற்று நள்ளிரவில் 2:30 மணி அளவில் ஜெயப்பிரகாஷ்-ஐ கைது செய்ய இரணியலில் இருக்கும் அவரது வீட்டை 30க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர்.

 போலீசார் ஜெயப்பிரகாஷ் கைது செய்யும் முயற்சியில் இருந்தபோது பாஜகவினர் திரண்டு வந்து போலீசாரை முற்றுகையிட்டனர்.   இதனால் கைது முயற்சி தோல்வி அடைந்தது.   தொடர்ந்து 4 மணி நேரமாக போலீசாருக்கும் பாஜகவினருக்கும்  இடையில் பேச்சுவார்த்தை  நடந்தது.  பின்னர் ஜெயப்பிரகாஷை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.    இதனால் குமரியில் 4 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.