பிரதமர் மோடிக்கு ஏபிசிடி கூட படிக்க தெரியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கு.. காங்கிரஸ் எம்.பி. கிண்டல்

 
மோடி

பிரதமர் மோடிக்கு  ஏபிசிடி கூட படிக்கும் திறன் கொண்டவராக என்பது எனக்கு சந்தேகம் என்று அவரை காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்கையில், ஆந்திராவை 2 மாநிலங்களாக பிரித்தது தொடர்பாக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை விமர்சனம் செய்தார்.  மாநிலததைபிரிக்கும் செயல்முறை அவசரமானது என்றும், இதன் விளைவாக இரு மாநிலங்களும் (ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா) இப்போதும் கூட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

தெலங்கானா, ஆந்திர பிரதேசம் பிரிப்பு

பா.ஜ.க. பிரிவினைக்கு (மாநிலத்தை பிரிப்பதற்கு) எதிரானது அல்ல. ஆனால் அவசர நடவடிக்கை எடுக்க்பபட்டது. மேலும் காங்கிரஸின் ஆணவத்தின் பிரதிபலிப்பே இந்த பிரிவினை செயல்முறை என்று கடுமையாக தாக்கினார். மோடியின் உரைக்கு  எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா காங்கிரஸ், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகளை எரித்தது.

ரேவந்த் ரெட்டி

மேலும், பிரதமர் மோடியை படிக்காதவர் என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த்.ரெட்டி விமர்சனம் செய்தார். காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தெலங்கானா மாநிலத்தை பற்றி அடிப்படையற்ற மற்றும் பொருத்தமில்லாத குறிப்புகளை கூறி தெலங்கானா மக்களை அவமதித்தார். அவர் (மோடி) ஏபிசிடி கூட படிக்கும் திறன் கொண்டவராக என்பது எனக்கு சந்தேகம் என்று தெரிவித்தார்.