300 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை! தேனி பரபரப்பு

 
oop

300க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஓபிஎஸ்.  எடப்பாடி கூட்டிய பொதுக் குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள் பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். 

 அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது  முதல் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை தினந்தோறும் சந்தித்து வந்த ஓபிஎஸ் தற்போது தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் முகாமிடு உள்ள அங்கு தனது பண்ணை வீட்டில் தங்கி இருந்து தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

oop

அதிமுகவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளும் ஓபிஎஸ்சை  சந்தித்து  செல்கின்றனர் . தென்காசி, நெல்லை, திருவாரூர் மாவட்ட செயலாளர் பலரும் ஓபிஎஸ்சால் நியமிக்கப்பட்டவர்கள். அப்படி ஓபிஎஸ்சினால் நியமிக்கப்பட்ட 300க்கும்  மேற்பட்ட நிர்வாகிகள்  பெரியகுளத்தில் இருந்த ஓபிஎஸ் பண்ணை வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.

 இது குறித்து ஓபிஎஸ்சை சந்தித்து விட்டு பேசி வந்த நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம்,    எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை குழப்பத்தில் வைத்திருக்கிறார்.   அதிமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளார்கள்.   அதிமுகவில் தற்போது உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ஓபிஎஸ் கையெழுத்து போட்டு நியமிக்கப்பட்டவர்கள்.  அவர்களை எல்லாம் இபிஎஸ் நீக்கம் செய்ய தயாரா?   என்று கேட்டிருக்கிறார்.