பாதி அமைச்சர்கள் மீது ஊழல் புகார் - விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும் :ஜெயக்குமார்

 
aஇ

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கும் நிலையில் திமுக அமைச்சர்கள் பாதி பேர் மீது ஊழல் புகார் உள்ளது. விரைவில் கம்பு எண்ணுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.  அவர் மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது ,  திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.  திமுக மீது இருக்கும் அதிருப்தியை திசை திருப்பவே சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற உத்தியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்.   திமுக அமைச்சர்கள் பாதி பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.  விரைவில் கம்பி எண்ணும் நாள்  நிச்சயம் வரும் என்றார் அழுத்தமாக.

ஜ

அதன்பின்னர், ராகுல் தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரம் இல்லை என்றார் ஜெயக்குமார்.

 மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,   மோடி அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

 அப்போது அவர் தமிழ்நாட்டை பாஜக ஒருபோதும் ஆள முடியாது என்றார்.   மேலும் தமிழகம் குறித்து அவர் தனது பேச்சில் அதிகம் குறிப்பிட்டார்.  கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மாநிலங்களுடன் கலந்து பேசி தீர்வு காண்பதுதான் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தான். மாநிலங்களுக்கு தேவையானதை செய்வதுதான் கூட்டாட்சி. 

ரா

 தமிழகத்தை ஒருபோதும் மத்திய பாஜக அரசு ஆள முடியாது.   அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தையும்  பாஜக  ஆள முடியாது என்று ஆவேசமாக பேசி இருந்தார் ராகுல் காந்தி.

 இதனால் தமிழகம் குறித்து அதிகம் பேசுவது ஏன் என்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,   ‘நான் தமிழன்’ என்று பதிலளித்தார்.  ராகுலின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

 இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   ‘’ ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’’ என்று தெரிவித்து இருக்கிறார்.   அவர் மேலும் இதுகுறித்து,     ‘’திமுகவிடன் சேர்ந்து ஒரு தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு, தமிழன் தமிழன் என்று சொன்னால் தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ராகுல் காந்தி தமிழன் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரம் இல்லை’’ என்று அழுத்தமாகச் சொன்னார் ஜெயக்குமார்.