புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் அல்ல, களத்தில் அரசியல் செய்ய வேண்டும்... பா.ஜ.க.வை மறைமுகமாக தாக்கிய டி.கே.சிவகுமார்

 
ஒரு கோடியிலிருந்து 100 கோடி ஆறே வருடத்தில்! டிகே சிவகுமார் மகள் விளக்கம்!

புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் அல்ல, களத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வை கர்நாடக காங்கிரஸ் தலைவர் மறைமுகமாக தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில், நேஷனல்  ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பவன் குமார் பன்சால் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு

இந்நிலையில் புதிய திருப்பமாக,  கடந்த மாதம் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் ஆகியோரை அக்டோபர் 7ம் தேதியன்று  (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கர்நாடகாவில் தற்போது ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதால், விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் தரும்படி டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அமலாக்கத்துறை மறுத்து விட்டது.

அமலாக்கத்துறை

இதனையடுத்து, யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு  அளித்த நிதி பங்களிப்பு தொடர்பான விசாரணை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேசுகையில், புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் அல்ல, களத்தில் அரசியல் செய்ய வேண்டும். நான் கர்நாடக தலைவராக இருந்தாலும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இன்று (நேற்று முன்தினம்) இந்த விசாரணை  நடத்த வேண்டிய அவசியம் என்ன?. நான் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டேன் ஆனால் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.