திமுக - மதிமுக கூட்டணி!- வைகோவின் கவலை

 
v

 திமுக -மதிமுக கூட்டணியில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என கவலை தெரிவித்தார் வைகோ.

 மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.   வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.   இதற்கு கட்சியின் நிர்வாகிகள் பலரும் முன்னதாகவேஅதிருப்தி தெரிவித்துள்ளனர். 

vv

 இத்தனை காலமும் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கும்போது திடீரென்று முக்கிய பொறுப்புக்கு துரைவைகோவை கொண்டு வருவதா என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.   இதனால் அந்த நிர்வாகிகளை எல்லாம் மதிமுகவில் இருந்து நீக்கப் போவதாக செய்திகள் பரவி வந்தன.  

இந்நிலையில் இன்று கட்சியின் முக்கிய பொறுப்புக்கு துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  அதன் பின்னர் கட்சியின் முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.  

d

 இதையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ,   கட்சியில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொன்னார்.   தொடர்ந்து பேசிய அவர்,   மதிமுகவில் இருந்து யாரையும் இழக்க தயாராக இல்லை என்று சொன்னவர்,  கட்சியின் எந்தவித கூட்டத்திற்கும் வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காத்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.

 மேலும் பேசிய வைகோ,    ஆனாலும் அவர்கள் திமுக- மதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட ஒரு சிலர் கட்சிக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.