தினம் ஒருவரை அடிக்கிறோம் என்று திமுக அமைச்சர்கள் சபதம் எடுத்துவிட்டார்கள் - அண்ணாமலை விளாசல்

 
a

திமுக அமைச்சர்கள் தொண்டர்களையும் மக்களையும் அடிப்பதாக சபதம் எடுத்தது போல் தெரிகிறது. அதனால், அவர்களிடம் பாதுகாத்துக்கொள்ளும்படி  தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

na

 திருவள்ளூர் அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.   முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் அமைச்சர் நாசர்.   அப்போது தனக்கு உடனே நாற்காலி எடுத்து வந்து போடாததால் தொண்டர்களை பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டு கல்லை எடுத்து அவர்கள் மீது விட்டு எறிந்தார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி கட்சியினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன .  இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.   கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து,  சால்வை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ne

 உதயநிதி ஸ்டாலின் அருகே நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு நின்று இருந்தார்.  வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு சென்றார்கள்.  ஒரு தொண்டர் உதயநிதிக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார்.  அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை  பிடித்து அங்கிருந்து தள்ளினார்.

 இதை பார்த்து பதறிய உதயநிதி,   அமைச்சரிடம் ஏண்ணே இப்படி.. இல்ல வேண்டாம்  என்று சமாதானப்படுத்தினார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகிறது. திமுகவினரின் சுயரூபம் அடிக்கடி இப்படி வெளிப்பட்டு விடுகிறது உபிஎஸ் இதை வரவேற்பார்களா ?எதிர்பார்களா? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவர் கல்லால் அடிக்கிறார் ஒருவர் கையால் அடிக்கிறார் . உங்கள் பிழைப்பு நாய் பிழப்பாக  இருக்கும் போல தெரிகிறது. பாவம் உபிஸ் என்று வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றார்கள்.


இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’தினம் ஒருவரை அடிக்கிறோம் என்று திமுக அமைச்சர்கள் மக்களையும் தொண்டர்களையும் அடிப்பதாக சபதம் எடுத்தது போல் தெரிகிறது.  சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் கற்களை வீசி எறிந்தார்.  இப்போது இன்னொரு அமைச்சர்  ஆவேசமாக அடித்து தள்ளுகிறார்.  அதனால் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.  எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க  பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்!