திமுகவின் புதியன கழிதல் பழையன புகுதல்! கடுப்பில் வ.செ.க்கள் - கையை பிசையும் மா.செ.க்கள்

 
ட்ம்க்

 வட்டச் செயலாளர்கள் எல்லாம் செம கடுப்பில் இருப்பதால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து நிற்கிறார்கள் திமுக மாவட்ட செயலாளர்கள். சென்னை மாநகராட்சியில்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  ‘புதியன கழிதல் பழையன புகுதல்’விவகாரத்தால்தான் இந்த பரபரப்பு.

 சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன.   இதில் ,  பெரிய வார்டுகளை எல்லாம் இரண்டாக உடைத்து 300 வார்டுகள் ஆக்கியது திமுக.   அமைப்பு ரீதியாகவும் வட்டச் செயலாளர்களை நியமித்திருந்தது.   இப்போது திடீரென்று அந்த 300 வார்டுகளை பழையபடியே 200 வார்டுகளாக்க தலைமை முடிவு செய்து இருக்கிறதாம்.

அன்ன்

திமுகவின் இந்த புதியன கழிதல் பழையன புகுதல் யுக்தியால் செம கடுப்பில் இருக்கிறார்களாம் வ.செ.க்கள்.   புதிதாக அமைக்கப்படவிருக்கும் 200 வார்டுகளுக்கும் முறையாக தேர்தல் நடத்தி வட்டச் செயலாளர்களை நியமிக்க தலைமை முடிவு செய்திருக்கிறதாம்.  

இதனால்,  தற்போது பதவி வகித்து வரும் வ.செ.க்கள்  கொதித்துப் போயிருக்கிறார்கள்.   இன்னும் நான்கு வருடம்  ஆட்சி இருக்கிறது என்று செம கெத்தாக சுற்றிக்கொண்டிருந்த அவர்களை எல்லாம் கொத்தாக தூக்கி கடாசும்படி தலைமை முடிவெடுத்திருப்பதால்தான் இந்த கொதிப்பு.

 முறைப்படி தேர்தல் என்றால் அதில் யார் யார் வருவார்களோ?  தற்போது பதவியில் இருக்கும் தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ? 300 ல் 100 கழிவதால் 100 பேருக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமே? என்று செம கடுப்பில் இருக்கும் அவர்கள்,  புதிய வட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க விடாதபடி முறையாக தேர்தல் நடக்க முடியாதபடி முட்டுக்கட்டை போட்டு நிற்கிறார்களாம்.  இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் திமுக சென்னை மா.செ.க்கள் என்று தகவல்.