இதற்கான பலனை திமுக விரைவில் அறுவடை செய்யும் -எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

 
ve

சென்னையில் நடைபெற்ற மத்திய சதுக்க நடை பாதை திறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் ‘’புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி .ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’’ என்பதற்குப் பதிலாக,  ‘’ டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’’ என்று மட்டும் திமுக அரசு விளம்பரம் செய்துள்ளதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

mg

 அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம்,    ‘கலைஞர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுகின்ற நேரத்தில் ’புரட்சித் தலைவர்’ என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயல்.   அதிமுக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுகுறித்து,  தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட, "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதை திறப்பு விழா" விளம்பரத்தில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்பதில் "புரட்சித்தலைவர்" என்ற அடைமொழி மக்களின் ஏகோபித்த உணர்வுகளால் சூட்டப்பட்டது.

sm

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி வந்த திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான செயல்களை தொடர்ந்து இந்த அரசு செய்யுமேயானால், அதற்கான பலனை திமுக விரைவில் அறுவடை செய்யும் என்கிறார்.

மேலும்,  மக்களால் சூட்டப்பட்ட புரட்சித் தலைவர் என்ற அடைமொழியை, அரசு விளம்பரங்களில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.