ஆட்சிக்கு ஆபத்து! காப்பாற்ற சபரீசன் எடுத்த முயற்சி!
தமிழகத்தில் தொடர்ச்சியாக தேர் சரிந்து விழுந்து கொண்டே இருக்கிறது . சில இடங்களில் தேர் எரிஞ்சு போகுது. இந்த தேர் விபத்துகள் எல்லாம் ஆட்சிக்கு ஆபத்து என்கிற அறிகுறிதான் இதெல்லாம் என்று ஜோதிடர் எச்சரிக்க, பதறிப்போன சபரீசன் திருச்செந்தூரில் 12 சிவாச்சாரியார்கள் வைத்து சிறப்பு பரிகார பூஜை செய்து இருக்கிறார் .
திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடத்திற்குள் தொடர்ச்சியாக தேர் விபத்துகள் நடந்து வருகின்றன. தேர் சரிந்து விழுந்து, தேர்வு முறிந்து விழுந்து, தேர் எரிந்து போய் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை அடுத்து தேர் என்பது இறைவனும் அரசனும் வலம் வரும் வாகனம். திருவிழா நேரத்தில் சாமி தேரில் வரும், மன்னனும் அதேபோல நகர்வலம் வரும்போது தேரில் வருவார். அதனால் தமிழ்நாட்டில் நடக்கும் தேர் விபத்துகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கு நல்லதில்லை. தமிழ்நாட்டு ஆட்சிக்கு ஆபத்து என்பதை அறிவுறுத்துவதாகத் தான் இந்த தேர் விபத்துகள் உள்ளன. அதன் அறிகுறி தான் இந்த தேர்வுபத்துகள் என்று ஜோதிடர் மகேஷ் ஐயர் எச்சரித்திருக்கிறார்.
தமிழகத்தில் நிழல் முதல்வர் என்று சொல்லப்படுகின்ற, தமிழக அரசின் அதிகாரம் மையம் என்று வர்ணிக்கப்படுகின்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பர் லண்டன் வெங்கட்டிடம் ஜோதிடர் இதை சொல்லி இருக்கிறார். லண்டனில் இருந்தாலும் மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு வந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது லண்டன் வெங்கட்டின் வழக்கம்.
அப்படி செல்லும்போதுதான் ஜோதிடர் மகேஷ் ஐயர் எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். இதை சபரீசன் முதல்வர் மற்றும் குடும்பத்தினருடன் பேசி விவாதிக்க இது குறித்த பேச்சு போய்க் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணத்தில் தேர் சரிந்து விட்டது. இதை பார்த்து மீண்டும் ஜோதிடர் எச்சரிக்க, லண்டன் வெங்கட் சபரீசனை தொடர்பு கொண்டு உடனே பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யலாமென்று சொல்ல, அதன்படி தான் கடந்த ஒன்றாம் தேதி அன்று திருச்செந்தூர் சென்று 12 சிவாச்சாரியார்கள் வைத்து வள்ளி குகையில் பரிகார பூஜை நடத்தி இருக்கிறார் சபரீசன்.