அதிமுக கோட்டையில் 438 கள்ள ஓட்டு போட்டதா திமுக? மறு தேர்தலா?

 
n

அதிமுக கோட்டையில் 438  கள்ள ஓட்டுக்களை  திமுக போட்டதாகவும்,  இதனால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 7 வாக்குகள் வித்தியாசத்தில் பறிபோனதாகவும்,  இந்த வார்டில் மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி  தேர்தல் கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்றது.   22 ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நகராட்சியாக இருந்த நாகர்கோவில்,  கடந்த அதிமுக காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.   அப்போது நாகர்கோவில்  மாநகராட்சியில் சில ஊராட்சிகளில் இணைக்கப்பட்டு வார்டுகள் மறுவரை செய்யப்பட்டது.  

voo

 அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டிலிருந்து 438 வாக்குகள் 13வது வார்டு மாற்றப்பட்டு வார்டு மறுவரையறை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.   இந்த நிலையில் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12வது வார்டு அதிமுகவின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் திமுகவினர் சதி செயல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.   அதாவது 13-வது வார்டில் இருந்து மாற்றப்பட்ட 438 வாக்குகளை பன்னிரண்டாவது வார்டிலேயே கள்ள வாக்குகள் பதிவு செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 திமுகவின் இந்த முறைகேடு காரணமாக கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்த 12வது வார்டு அதிமுக வேட்பாளர் சகாயராஜ் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

 12வது வார்டு திமுக வினர் செய்த முறைகேடு கள்ள ஓட்டு பதிவு குறித்து தகுந்த ஆதாரங்களுடன் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக வேட்பாளர் சகாயராஜ் புகார் அளித்திருக்கிறார்.   அந்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காத்து வருவதால்  போராடி நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக அறிவித்திருக்கிறது.

 வார்டு மறுவரையறை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் வாக்குப்பதிவுக்கு பழைய வாக்காளர் பட்டியல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதோடு,   கள்ள வாக்குகள் பதிவு செய்த திமுகவினருக்கு சாதகமாக பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் வெற்றி அறிவிப்பை திரும்பப் பெற்று 12 வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பி இருக்கிறது அதிமுக.