நுபுர் சர்மா சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால் வந்து வாதிடுங்கள் ஆனால் வாளை எடுக்கிறீர்கள்.. திலீப் கோஷ்

 
திலிப் கோஷ்

நுபுர் சர்மா சொன்னது தவறு என்று நீங்கள் (வன்முறையில் ஈடுபட்டவர்கள்) நினைத்தால், வந்து வாதிடுங்கள் ஆனால் தர்க்கத்திற்கு பதிலாக நீங்கள் வாளை எடுக்கிறீர்கள் என்று திலீப் கோஷ் தெரிவித்தார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் திலீப் கோஷ் பேசுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்கு முன், கலவரங்கள் நடந்தன, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், இந்த வன்முறைகளுக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக பேச உலகம் அஞ்சுகிறது. நுபுர் சர்மா சொன்னது தவறு என்று நீங்கள் (வன்முறையில் ஈடுபட்டவர்கள்) நினைத்தால், வந்து வாதிடுங்கள், உங்கள் தர்க்கத்தை பொதுவில், தொலைக்காட்சியில் கொடுங்கள். தர்க்கத்திற்கு பதிலாக நீங்கள் வாளை எடுக்கிறீர்கள்.

நுபுர் சர்மா

இந்தியாவில் பெங்காலி, தமிழ், பஞ்சாபி, மராத்தி என ஒவ்வொருவருக்கும் அவரவர் அடையாளம் உண்டு. அவர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, உணவு, உடைகள் கொண்டுள்ளனர். ஆனால் நாடு ஒன்றுதான். மற்ற கலாச்சாரத்தை மதிப்பதே நமது மதிப்பு. இந்த பண்பாட்டு அடையாளத்துக்குள் அரசியல் நுழையும் போதுதான் பிரச்சினை. உங்கள் மதத்தை நேசியுங்க, பிற மதத்தை மதியுங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்து தண்டனை வழங்கக்கோரி டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேலும், நுபுர் சர்மாவை கொலை செய்வோம் என்று சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர்.