தலைநகர் மா.செ.க்களின் தடாலடி! தவிக்கும் எடப்பாடி!

 
ep

 தலைநகர் மா. செ.க்கள் எடுத்திருக்கும் தடாலடி முடிவால் தவித்துப்போய் நிற்கிறாராம் எடப்பாடி.  

 அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக ஓபி எஸ்-க்கு சொற்ப அளவிலேயே ஆதரவாளர்கள் இருந்துள்ளனர்.  இதையே சொல்லித்தான் எதிர்த்தரப்பினர் அவரை கிண்டலடித்து வந்தனர்.  ஆனால் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பின்னர் எடப்பாடி தரப்பினர் பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவ ஆரம்பித்து விட்டனர் என்கிறார்கள்.

ee

 இந்த நிலையில்  தலைநகர் சென்னையில் இருக்கும் நாலு மா.செ.க்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது .   இதனால் கையை பிசைந்து தவித்து நிற்கிறது எடப்பாடி  தரப்பு என்கிறது அதிமுக வட்டாரம்.

 ஒற்றுமையாக போய்விடலாம் எல்லோரும் ஒன்று பட்டு செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துப் பார்த்தார்.   எடப்பாடியும் அவரது தரப்பினரும்  அதை ஏற்காததால் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் வேலுமணி, வீரமணி உள்ளிட்ட எடப்பாடியின் முக்கிய ஆதரவாளர்களிடம் பேசிப் பார்த்தார்.  அவர்களும் ஒத்துவரவில்லை என்பதால் எடப்பாடி பக்கம் உள்ளஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர் .

தானாகவே ஓபிஎஸ் பக்கம் அணி தாவும் நிர்வாகிகள் ஒரு பக்கம் இருக்க.  கட்சியும் சின்னமும் ஓபிஎஸ் வசம் தான் இருக்க போகுது என்று சொல்லி எடப்பாடி தரப்பினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயசியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.  இந்நிலையில் தான்  தலைநகர் சென்னையில் இருக்கும் நான்கு மா.செ.க்கள் ஓபிஎஸ் தரப்போடு தொடர்பில் இருக்கிறார்களாம்.    எந்த நேரத்திலும் அவர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி விடுவார்கள் என்று தகவல் பரவுகிறது.  இதை கேள்விப்பட்டதில் இருந்து எடப்பாடியும் அவரது தரப்பினரும் கையை பிசைந்து கொண்டு தவிப்பில் இருக்கிறார்களாம்.