ஓபிஎஸ் மக்களிடமிருந்தும், தொண்டர்களிடமிருந்தும் விலகிவிட்டார்- தங்கமணி
அதிமுக அலுவலகத்தை அடித்து உதைத்த சம்பவத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும் விலகி விட்டார் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்ல் பூங்கா சாலையில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் அதிமுக வினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, “அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு என்றால் எந்த இடத்தில் நிர்வாக சீர்கேடு என்பதை அமைச்சர் கூற வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த போது பலமுறை மத்திய அரசிடம் கடிதம் வந்தும் மின் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. மின் துறை என்பது ஒரு சேவை துறை ஆகும். சேவை துறையை சேவை துறையாக வைத்திருக்க வேண்டும். மின் கட்டண உயர்வை மத்திய அரசை காட்டி தப்பித்து கொள்கின்றனர். இலவச வேட்டி சேலை திட்டத்தை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விசைத்தறி தொழில் முடக்குவது டன் லட்ச கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். மின் கட்டண உயர்வால் விசைத் தறித் தொழிலே முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்த சம்பவத்திற்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் மக்களிடம் இருந்தும் தொண்டர்களிடம் இருந்து விலகிவிட்டார்” எனக் கூறினார்.